/ கதைகள் / நமது இதயங்கள்

₹ 230

வேறுபட்ட எண்ணம் உடையோருக்கு இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தியுள்ள நாவல் நுால். உலக புகழ் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் படைப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. காதல் பற்றி இரண்டு கலைஞர்களின் எண்ணப் போக்கின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. கணவனால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அழகிய பெண்ணுக்கு, அவன் மறைவால் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. அதன் பின், வாழ்க்கையில் அந்த பெண் பின்பற்றும் நடைமுறைகள், விருந்து நிகழ்வுகள், ஆண் நண்பர் களுடனான உறவு என வித்தியாசமான கோணங்களில் அணுகுகிறது. காதல் குறித்த வழக்கமான சிந்தனை போக்கை நொறுக்கி, புதிய எண்ணத்தை உருவாக்கும் நாவல். – ஒளி


சமீபத்திய செய்தி