/ மருத்துவம் / நமது தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள்
நமது தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள்
கோவில்களில் தல விருட்சமாக நிற்கும் மரங்களின் மூலிகை குணம் பற்றி தொகுக்கப்பட்டுள்ள நுால். இதில், 40 மரங்கள் குறித்த விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மரங்களை அடையாளம் காணும் வகையில் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்த மரம் எந்த கோவில் தல விருட்சம் என்ற தகவலுடன், அதன் மருத்துவப் பயன்பாடும் விளக்கப்பட்டுள்ளது.அவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. நம் கண் முன் நிற்பவை தான் பல... அவற்றை பற்றிய அறிவு இன்மையால் பயன்படுத்த முடியாமல் இருப்போம். அதை நிவர்த்திக்கும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மரம் சார்ந்த அறிவை பெற விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.– ராம்