/ கட்டுரைகள் / நான் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகன்

₹ 250

இளமைப் பருவத்தில் ஷாகா அமைப்பில் இணைந்து கல்லுாரி படிப்பு வரை உதவி பெற்றதையும், கடும் முயற்சியால் அச்சக நிறுவனராக உயர்ந்தது பற்றியும் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பற்றிய தகவல்களை அனுபவத்தோடு தருகிறார்.ஷாகா அமைப்பின் நற்செயல்களாக இரவுப்பள்ளி, ஆன்மிக ஸ்லோக மனப்பாடம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பல்லாண்டு, அனுமன் சாலிஸா, விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் போன்றவை கற்றது பற்றியும் எழுதியுள்ளார். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, மனிதநேய பணிகள் நடைபெற்ற பாங்கு விவரிக்கப்பட்டு உள்ளது.சமத்துவம், சகோதரத்துவம், சமுதாய ஒருங்கிணைப்பை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்., என, கருத்தை நிறைவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லும் நோக்கில், 15 கட்டுரைகள் ஆழமான கருத்துகளை கொண்டுள்ளன. சமூக அக்கறையோடு எழுதப்பட்டுள்ள நுால்.– பேராசிரியர் இரா.நாராயணன்