/ இசை / நான் சொன்னதை நினைத்தால் வலி தெரியாது!
நான் சொன்னதை நினைத்தால் வலி தெரியாது!
நாடகமும், கருத்துள்ள கவிதைகளும் இணைந்துள்ள நுால். பருவ வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி பற்றி தெளிவுபடுத்துகிறது. மெய்யான காதல் உணர்வு, வாழ்வில் போட்டி, பொறாமை அதனால் ஏற்படும் மோதல்கள், மோசமான விளைவுகள் பற்றி எடுத்து சொல்லப் பட்டுள்ளன. நாடக கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வசனங்கள் கவரும் வகையில் உள்ளன. வயதுக்கு ஏற்ப எண்ணங்கள் எந்த முறையில் வெடிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆத்திரம், அதிர்ச்சி, ஏமாற்றம், துரோகம் என கலவை உணர்வுகளுடன் உள்ளன. கருத்துள்ள கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. பருவ வயதுக்குள்ள பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்து உள்ளது. வாசித்த உடன் யோசிக்க வைக்கும் நுால். – டாக்டர் கார்முகிலோன்




