/ கவிதைகள் / நங்கூர மனிதர்கள்

₹ 70

சமூக அவலம், பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு இந்த சமூகம் தரும் வலியை, ‘பூவா மரங்கள்’ கவிதை நேர்த்தியாக உணர்த்துகிறது. விலைமாதர் வாழ்க்கை சிக்கலையும் எடுத்துரைக்கிறது. இயற்கை அழிவை கூறும் கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. தண்ணீரை பாதுகாப்பதன் அவசியத்தை, ‘நா வறட்சி’ கவிதை பகிர்கிறது. கல்வியின் அவசியத்தையும், பள்ளி பருவத்தில் பாதை மாற வைக்கும் போதை குறித்தும் எச்சரிக்கிறது. அனைத்திலும் ஜாதி பார்க்கும் ஆண்கள், பாலியல் சீண்டலில் பார்ப்பதில்லை என பாய்கிறது. செவிலியர் சேவையை பாராட்டுகிறது. சமூக நெருக்கடிகளில் முள்வேலிகளை தாண்டும்படி கூறுகிறது. சீர்திருத்த கருத்துள்ள கவிதை தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை