/ கதைகள் / நன்னெறிக் கதைகள்
நன்னெறிக் கதைகள்
வாழ்க்கையில் வழிகாட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தீவினை புரிந்தோர், அதனால் எதிர்கொண்ட சாபங்கள் பற்றிய கதைகள் இடம் பெற்றுள்ளன. கண்ணதாசனின் குரு பக்தி, ஈசனின் மெய்சிலிர்க்கும் திருவிளையாடல்கள், கீதையின் சாரம் போன்ற கருத்துகளும் கதையாக இடம் பெற்றுள்ளன. மனிதாபிமான பண்புகள் கதை வடிவில் தரப்பட்டுள்ளன. சாபத்துக்கு உள்ளானோரின் விவேகமற்ற வீரம், நாசம் உண்டாக்கும் என்கிறது. அறத்தை நிலைநாட்ட, யாரையும் தண்டிப்பதில் தவறில்லை போன்ற புராண, இதிகாச நிகழ்வுகளும் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன. நன்னெறி ஊட்டும் கதைகளின் தொகுப்பு நுால். – புலவர் சு.மதியழகன்




