/ இசை / நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
ஊர்ப்புறத்தில் பாடப்படும் வாய்மொழிப் பாடல்களின் தொகுப்பு நுால். வயல் மற்றும் பணித் தளங்களில் வேலை செய்வோர் சோர்வை போக்கும் வகையில் இயல்பாக பாடியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் பணியின் போது பாரம்பரியமாக பாடப்படுவதை சேகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் அமைந்துள்ள கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பண்பாட்டு தொடர்ச்சியாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணித் தளங்களில் பாடுவது போன்றே மாற்றமின்றி அதே பாணியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் சந்த வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. தனியாகவும், ஜோடியாக இணைந்தும், குழுவாகவும் பாடப்பட்டவை இதில் உள்ளன. கள ஆய்வுடன் அமைந்த பாடல் தொகுப்பு நுால். -– ஒளி