/ கதைகள் / நெஞ்சினில் நீ
நெஞ்சினில் நீ
நெஞ்சில் இருக்கும் அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற மேலான புரிதலை தரும் நுால். கலியுகத்தில் கடவுளின் அவதாரம் நிகழுமா? என்ற கேள்விக்கு பதிலாக இறைவியே ஒரு கதாபாத்திரமாக மலர்ந்து உரையாடுகிறாள். கதைகள் கோர்க்கப்பட்ட கதம்ப மாலையாக இருக்கிறது. காதல் என்பது உடல் அழகை சார்ந்ததல்ல, அக அன்பில் உறைந்துள்ளது என முழங்குகிறது. தற்கொலைக்கு முயன்ற மனங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் மருத்துவர் அன்பில் மனம் கரையும். ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பின் விலாசமாக இருப்பதாலே, வாசகர்களின் மனதையும் அன்பின் வழியில் வழி நடத்திச் செல்லும் வல்லமை கொண்டதாக உள்ளது. புதுமை அனுபவத்தை தரவல்லது.-– தி.க.நேத்ரா