/ கவிதைகள் / நீலபத்மநாபன் ஒரு இதிகாசம்
நீலபத்மநாபன் ஒரு இதிகாசம்
பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபன் படைப்புகளை ஆய்வுப்பார்வையில் அலசும் நுால். எழுத்தாளருடன் வாசகருக்கு உள்ள மேலான உறவை பண்புடன் வெளிப்படுத்துகிறது. கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. நீலபத்மநாபன் படைப்புகளை வாசித்து உள்ளிருக்கும் கருத்துகள் தெளிவாக அலசப்பட்டு உள்ளன. கதாபாத்திரங்களின் உருவாக்கத்தின் வழியாக மனித மேன்மைக்கு உதவும் மேன்மையை அறியத்தருகிறது. உலக அளவில் இலக்கிய படைப்பாளர்களுடன் ஒப்பிட்டு போற்றுகிறது. வாழும் காலத்தை கூர்ந்து கவனித்து படைப்புகள் வழியாக சமூகத்தின் மனசாட்சியை முன்வைத்துள்ள நீல பத்மநாபனை பாராட்டும் விதமாக கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. நீல பத்மநாபன் படைப்புகள் மீது ஆய்வுப் பார்வையை வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். – சிவா




