/ கவிதைகள் / நீர் மிதக்கும் நெடுவாய்க்கால்
நீர் மிதக்கும் நெடுவாய்க்கால்
வேளாண் குடும்ப பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி மீதுள்ள பற்று, இயற்கையை ஆராதிக்கும் காதல், மண், நீர்நிலை சார்ந்த பொருண்மைகளில் வடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையிலும் கிராம வாழ்வின் நடைமுறைகள் மென்மையாக வெளிப்படுகின்றன. இடையிடையே மனிதர்களிடம் நிலவும் ஒவ்வாமை, பாகுபாடு, ஜாதி ஆதிக்கத்தால் இழிவு, ஆணவ கொலை அவலம், மனிதத் தன்மையின்மை குறித்து சுட்டிக்காட்டி விழிப்பு தருகிறது. நம்பிக்கையை முன்வைத்துள்ள, ‘கொடி நரம்புகள் அறுபட்டு கொதிக்கும் உதிரம் திரண்டோட தலை கீழாகத் தொங்கும் தாய் ஆட்டைப் பார்த்து...’ போன்ற கருத்தோட்ட கவிதைகள் உக்கிரமுடன் அமைந்துள்ளன. கிராம வாழ்வை படம் பிடிக்கும் கவிதை நுால். – சிவா




