/ புத்தக மதிப்புரை / நோயின்றி நுாறாண்டு வாழும் விதிகள்

₹ 200

உடலும், மனமும் எப்படி ஒன்றிணைந்து செயல்பட வழிகாட்டும் விதமாக அமைந்த நுால். வாழ்வுக்கு உகந்த பாதையை எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாளைக்கு இதயம் எத்தனை முறை துடிக்கிறது; நகமும், கேசமும் எவ்வளவு வளர்கின்றன போன்ற துல்லிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை வியப்புடன் தெரிவிக்கிறது. பழந்தமிழ் பாடல்களில் குறிப்பிடும் அளவு விகிதம், இன்றைய கணக்கில் வகுத்து காட்டி விளக்குகிறது. சித்தர்கள் வகுத்தளித்த மூலிகைக்குளியல் பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன. உடல் நலத்தை பேணுவதன் அவசியம் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தாய், சேய் நலம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இனிதாக வாழ எண்ணுவோர் அவசியம் படிக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை