/ கவிதைகள் / ஒளித் தூறல்கள்
ஒளித் தூறல்கள்
சமூகத்திற்கு தேவையான வளரும் தலைமுறைகளுக்காக படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பெண் பட்டம் போல் பறக்கிறாள். ஆனால், நுால் ஆணின் கையில்! அவள் பறவை போல் பறப்பது எந்நாளோ’ என பெண் விடுதலையை பேசுகிறது.வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அழகான வரிகளில் விவரிக்கிறது. இயற்கையை நேசிக்கும் குணம் படர வேண்டும் என சொல்கிறது. கவலைகள், வெற்றிக்கு தடைக்கற்கள்; சரிவுகள் இல்லாத சாதனைகள் இல்லை என்கிறது. வீட்டு நுாலகத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. எண்ணற்ற சீரழிவு, பேரழிவுகளை சந்திக்கும் மனிதனின் மனம் எப்படிப்பட்டது என சிந்திக்க வைக்கிறது. நம்பிக்கை சிதறல்கள் அதிகம் உள்ளன. அவநம்பிக்கையை விலக்க, துணிச்சலுடன் செயல்பட துாண்டும் சொற்கள் ஏராளம்.வாழ்க்கையில் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். முக்கிய நிகழ்வு மனதை தொடும். அது போன்ற உணர்வை வழங்கும் நுால்.– ராகவ்