/ சிறுவர்கள் பகுதி / ஒளிரும் பாதை

₹ 75

சிறுவர் -– சிறுமியருக்காக சிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால். பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுவர்களை கவரும் தேவதை மற்றும் பேய்களை கதாபாத்திரங்களாக கொண்டு சுவாரசியமூட்டுகின்றன. அரசன், அரசி பாத்திரப் படைப்புகள் வழியாக சில கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் கற்பனையும், அற உணர்வும் கலந்துள்ளன. அறிவியல் நுட்பம் கலந்த விவரிப்புகள் சிந்தனை ஆற்றலை துாண்டும் வகையில் உள்ளன. சிறுவர்கள் புரிந்து கொள்ளும் உளவியல் அடிப்படையில், சுவாரசிய நடையில் கதைகள் படைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு அறிவூட்டுவதுடன் வாசிக்கும் ஆர்வத்தையும் துாண்டும் வகையில் அமைந்துள்ள நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை