/ புத்தக மதிப்புரை / ஓம்சக்தி தீபாவளி மலர் 2026
ஓம்சக்தி தீபாவளி மலர் 2026
அரிய படைப்புகளுடன் மலர்ந்துள்ளது ஓம்சக்தி தீபாவளி மலர். கட்டுரை, சிறுகதை, கவிதை என்ற அம்சங்களை தாங்கியுள்ளது. சனாதன தர்மத்தில் பண்டிகைகள், தீபாவளி தத்துவம், தினம் தினம் தீபாவளி, அதுதான் தீபாவளி, அட்டகாச தீபாவளி என, தீபாவளியை மையமாக வைத்துள்ள படைப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆன்மிக தேடலுக்கு வழிவகுக்கும் கட்டுரைகள் பலவும் தரப்பட்டுள்ளன. வரலாற்று பெருமையை எடுத்துரைக்கும் படைப்புகளும் இந்த தீபாவளி மலரில் அமைந்துள்ளன. நவீன தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்பு, அறிவியல் ஆக்கப்பூர்வ வளர்ச்சியை விளக்குவதாக உள்ளது. மனித உறவின் ஆழத்தை பேசும் கதைகளும் இடம் பெற்றுள்ளன. நிறைவு தரும் வகையில் அமைந்துள்ளது ஓம்சக்தி தீபாவளி மலர். – ஒளி




