/ கட்டுரைகள் / ஒரு பக்கக் கட்டுரைகள் (பாகம் – 25)
ஒரு பக்கக் கட்டுரைகள் (பாகம் – 25)
முன்னேற்றத்துக்கு உகந்த கருத்துக்களை உள்ளடக்கியுள்ள, 81 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கல்கண்டு எந்தப் பக்கம் சுவைத்தாலும் இனிக்கும் என்பது போல் உள்ளது. பள்ளி, கல்லுாரி நுாலகங்களில் இடம் பிடிக்க வேண்டிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு ஜென் கதையில் மாமியாரை பழிவாங்க நினைத்த மருமகள், மாமியாரிடமே தஞ்சமான மகத்தான உண்மை கூறப்பட்டுள்ளது. அரிவாளோடு புறப்படுகிறவன், வெட்டு காயத்துடன் தான் திரும்ப வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கஷ்டங்களும் நஷ்டங்களும் தான் உயர்வையும், உன்னதத்தையும் தர வல்லது என உணர்த்துகிறது. வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாதீர்; தோல்வியை நெஞ்சில் சுமக்காதீர் என அறிவுரைக்கும் நுால். – சீத்தலைச் சாத்தன்




