/ பயண கட்டுரை / ஊட்டி சுற்றுலா உலகின் சுவாசம்
ஊட்டி சுற்றுலா உலகின் சுவாசம்
நீலகிரியின் சிறப்பம்சங்களை கூறும் நுால். விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை பற்றி எளிமையாக ஆர்வமூட்டும் அறிமுகம் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சூழலியல் சார்ந்த அக்கறை, குளிர் பிரதேச பூர்வகுடிகள் பண்பாட்டு அணுகுமுறை, தொல்லியல் தகவல்கள், சினிமா படப்பிடிப்புகள் பற்றிய சுவாரசியமான செய்திகள் உள்ளன.கோடை வாசஸ்தலத்தின் வரலாறும், சிறப்புகளும் சமூக கரிசனத்துடன் ஆவணப்படமாக கண் முன் தோன்றுகிறது. பூச்சிகளை உண்ணும் தாவரம், தங்கத்தை உருக்கும் அதிசயம், நீலமலை பெயருக்கான காரணம், கற்கால பாறை ஓவியங்கள் பற்றி எல்லாம் தகவல்கள் உள்ளன.– இளங்கோவன்