/ பயண கட்டுரை / ஓர் அந்தமான் தமிழரின் அமெரிக்கப் பயணம்-
ஓர் அந்தமான் தமிழரின் அமெரிக்கப் பயணம்-
அந்தமானில் பணியாற்றியவர், அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை கூறும் நுால். அங்கு செல்வோருக்கு பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது. ரசனையுடன் சுவையான நடையில் உள்ளது.சார்லெட், அட்லாண்டா, வாஷிங்டன், நியூயார்க், மூர்ஸ்வெல் நகரங்கள் பற்றிய தகவல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. நாய்கள் பற்றி குறிப்பிடும் இடத்தே, பொருள் பொதிந்து விளக்கம் சுட்டப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாசாரம், வால்மார்ட் அங்காடி, ஹிந்து கோவில்கள், தாவரவியல் பூங்கா, மீன் காட்சியகம் பற்றிய தகவல்கள் உள்ளன. அமெரிக்கா செல்வோருக்கு பயனுள்ள குறிப்பு நுால்.– ராம.குருநாதன்