/ மருத்துவம் / ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்
ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்
மருத்துவ அனுபவங்களை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு நுால்.புதிய நோயாளிகள் எத்தகைய மனநிலையில் வருகின்றனர். எவ்வாறு நடந்து கொள்கின்றனர், எத்தகைய மனநிலையோடு வெளியேறுவர், வெளியேறிய பின், வாழ்க்கையை எவ்வாறு நகர்த்தி செல்வர் என்பதை கூர்ந்து நோக்கி வெளிப்படுத்தியுள்ளது.நோயாளிக்கும், மருத்துவமனைக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ செய்திகளை ஆம்புலன்ஸ், ஸ்டெதஸ்கோப், நோயற்றவரின் கடிதம், கடவுளாக மாறுதல் போன்ற கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மொழிப் பயன்பாடு, அணி நலன், கற்பனைத் திறன் அழகியல் அம்சங்களோடு சிறந்து விளங்கும் தொகுப்பு நுால். – முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்