/ கவிதைகள் / ஒரு நிமிடக் கவிதை
ஒரு நிமிடக் கவிதை
இளமையும், இனிமையும் கலந்த கவிதைகளின் தொகுப்பு நுால். முரண்பாட்டோடு துவங்குகிறது. தமிழ் தாயை, ‘பருவம் மாறா குமாரி இவள், பட்டினத்தாரையும் மயக்கியவள்’ என வர்ணிக்கிறது. எதுகை மோனையுடன், நாட்டுப்புற பாடல் சந்தமுடன், ஜல்லிக்கட்டு காளை போல் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. திருக்குறள் தமிழனுக்கு தாய்ப்பால் போன்றது என்ற அற்புத வரிகள் உள்ளன.‘காதல் பறவைகளை திருமணம் என்னும் கூண்டுக்குள் அடைக்காதீர். அதனால் காதலும் அழிகிறது வாழ்க்கையும் தொலைகிறது’ என்கிறது. வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, சிலம்பாட்டம், பறையிசை மற்றும் தலைவர்கள் பற்றியும் சிந்தனை பதிக்கிறது. வசனமும், கவிதையும் கலந்த நுால்.– முனைவர் மா.கி.ரமணன்




