/ கதைகள் / ஒரு ஊரின் கதை

₹ 250

ஹிந்து – முஸ்லிம் நண்பர்கள் இடையிலான நட்பு, குடும்ப உறவை கூறும் நாவல். இளமையில் நண்பர்களாக பழகி இலக்கியம், காதல், திருமணம் என படிப்படியாக நகர்கிறது.ஒரு கட்டத்தில் மனக்கசப்பால் பிரிய வேண்டிய நிலை வருகிறது. பல ஆண்டுக்கு பின் ஹிந்து நண்பருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, கடைசி ஆசையாக முஸ்லிம் நண்பரை பார்க்க விரும்புகிறார். அங்கு என்ன நடந்தது? நட்பு பிரிவுக்கு காரணம் என்ன என விடை காண்கிறது.காதலுக்கு உதவுவது, குடும்பத்தில் ஒருவராக நினைத்து பேச்சை கேட்பது, குடும்ப முடிவுகளால் ஏற்படும் விளைவு பற்றி கூறுகிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு அவசியம் என சமூக மாற்றத்தைக் காட்டுகிறது. மதம் கடந்த வாழ்வை கூறும் நாவல்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை