/ கதைகள் / ஒரு ஊர்ல... ஒரு ராஜா! ராணி!

₹ 70

சிறு­க­தைகள் மீது சிறு­வர்­க­ளுக்கும், பெரி­ய­வர்­க­ளுக்கும் எப்­போதும் ஈர்ப்பு குறைந்து போன­தில்லை. குழந்­தை­க­ளுக்கு கதைகள் சொல்லும் போது, ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா இருந்­தாராம்’ என்று தான் பெரும்­பான்­மை­யான கதை­க­களின் துவக்கம் இருக்கும். இதை நம் வாழ்­விலும் அனு­ப­வித்­தி­ருப்போம்.கன்­னிக்­கோவில் இராஜா எழு­தி­யுள்ள ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா! ராணி!’ சிறு­கதை தொகுப்பில் இது­போன்ற ஒரு கதையும் இடம் பெற்­றுள்­ளது. அதையே தொகுப்­பிற்கு தலைப்­பா­கவும் வைத்­துள்ளார். இதில் இடம் பெற்­றுள்ள அனைத்து சிறு­க­தை­களும் சிறுவர் கதைகள். சிறுவர் இலக்­கியம், வளரும் குழந்­தை­களின் வாழ்க்­கைக்கு பெரிய பங்­க­ளிப்பை செய்­பவை. ஒவ்­வொரு சிறு­க­தை­களும் நற்­பண்­பு­க­ளையும், நல்­லு­ணர்­வு­க­ளையும், வாழ்க்கை குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும். அந்த வகையில் ‘ஒரு ஊர்ல... ஒரு ராஜா! நல்ல தொகுப்­பாக, ஓவி­யங்­க­ளுடன், வெளி­வந்­துள்­ளது. சாகித்ய அகா­தெமி விரு­து­பெற்ற ம.இலெ.தங்­கப்பா முன்­னுரை வழங்­கி­யுள்ளார்.சு வின்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை