/ கதைகள் / ஒரு பெண்மானின் கண்

₹ 250

பஞ்சாபி மொழியில் புகழ் பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். பயங்கரவாத செயல்களின் விளைவையும், அது சமூகத்தில் ஏற்படுத்திய பிரதிபலிப்பையும் கதாபாத்திரங்கள் வழியாக படம் பிடிக்கிறது. பயங்கரவாத செயல்களால் பஞ்சாப் மாநிலப் பகுதி கடுமையாக பாதிக்கப் பட்டிருந்த காலத்தை மையப்படுத்தியுள்ளது. அது சமூகத்தில், ராணுவத்தில் எப்படி எல்லாம் வெளிப்பட்டது என்பதை படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளில் இயலாமை, கையாலாகாத்தனம், கேளிக்கை முனைப்பு போன்றவற்றை முகத்தில் அறைவது போல் வெளிப்படுத்துகின்றன. மனசாட்சியை உலுக்கும் கதாபாத்திரங்கள் உள்ளன. பஞ்சாபி சமூகத்தின் நெருக்கடி காலத்தை ஆராய்ந்துள்ள கதைகளின் தொகுப்பு நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை