/ இசை, இயல், நாடகம் / ஒரு சாமானியனின் பக்தி பாடல்கள்

₹ 140

தெய்வீகத்தை உணர்த்தும் 100 ஆன்மிக பாடல்களின் தொகுப்பு நுால். எக்காலத்திற்கும் பொருத்தமாய் நன்னெறிகளை புகட்டுகின்றன பாடல்கள். ‘குருமுனி கையாலே குட்டுப்பட்ட பிள்ளையார்’ என்றும், வில்வப் பிரியனே சித்தா பித்தனே என்று சிவன் மீதும் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. ‘அசுரனை கொல்ல வேல் எடுத்தாயே’ என முருகனை துதிக்கிறது. ‘விளக்க முடியாத விளக்கின் ஒளியே’ என துர்க்கையை புகழ்கிறது. ‘வனத்தை அழித்தே சினத்தை தணித்தவனே’ என அனுமாரை வர்ணிக்கிறது. தைப்பூச நாளில் ஜோதி வடிவமாக வணங்க வழிகாட்டுகிறது. தஞ்சை பெரிய கோவிலை, ‘ராஜராஜன் கட்டினானே கெட்டியான கோவிலையே’ என பாடியுள்ளது. எளிய நடையில் புரியும் வகையில் உள்ள பாடல் நுால். – முனைவர் கலியன் சம்பத்து