/ கதைகள் / ஒளவையின் அறம் கூறும் ஆத்திசூடி – நீதிக்கதைகள்
ஒளவையின் அறம் கூறும் ஆத்திசூடி – நீதிக்கதைகள்
ஆத்திசூடியின் விளக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நல்ல கருத்துக்களை சமூகத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதில், ‘அறஞ்செய விரும்பு’ துவங்கி, ‘சக்கர நெறி நில்’ வரை, 21 ஆத்திசூடி பொன்மொழிகள் கதைகளாக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பின்னணியில், குடும்ப பின்புலத்தில், பணி புரியும் இடங்களில், அதிகாரி – ஊழியர் பணி பின்னணியில் என சிறுசிறு சம்பவங்கள் மூலம் உயிரூட்டியுள்ளார். துவக்கத்தில் ஆத்திசூடி முழுதுமாக விளக்கப்பட்டுள்ளது. எளிய நடையும், படங்களோடு அமைந்த கதைகளும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன. சிறுவர்களுக்கு வாழ்வை போதிப்பதோடு, இலக்கியமாகவும் அமைந்துள்ள கதைகளின் தொகுப்பு நுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்