/ கதைகள் / ஒளவையின் பாதையில் கலங்கரை விளக்கம்
ஒளவையின் பாதையில் கலங்கரை விளக்கம்
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் மூன்று கதைகளின் தொகுப்பு நுால். அவ்வையார் பாடலின் பொருள் விளக்கமாக உள்ளது. கப்பலுக்கு கலங்கரை விளக்கம் உதவுவது போல, வாழ்க்கை பயணத்தில் அறிவுரைகள் உதவுவதை எடுத்துரைக்கிறது. யானையை தாக்கும் அம்பு பஞ்சை துளைக்காது. இரும்புக்கு பிளவாத கருங்கல் பாறை, பச்சை மரத்தின் வேருக்கு பிளந்துவிடும் என்கிறது. அடுத்த கதை, கல்லுாரி பேருந்தில் நடந்த சதியை கூறுகிறது. அதில், ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ என்ற பாடலை பதிவிட்டுள்ளது. மூன்றாவது, ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்’ என்ற பாடலுடன் துவங்குகிறது. சமூகத்தை திருத்தும் கதை நுால். – புலவர் ரா.நாராயணன்




