/ வாழ்க்கை வரலாறு / பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும்

₹ 190

பழந்தமிழர் வாழ்வியலை ஆய்வுப்பூர்வமாக ஆதாரங்களுடன் தந்துள்ள நுால். தமிழர் வரலாற்றை நிரூபிக்கும் சான்றுகளை புகைப்படங்களாகவும் தருகிறது.உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழன் என்ற அத்தியாயத்துடன் துவங்குகிறது. தமிழர் மரபுக்கலைகள் என்பதுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம், 11 தலைப்புகளில் தகவல்களை திரட்டியுள்ளது. இலக்கியம், வரலாறு, தொல்லியல் தொடர்பான ஆதாரங்களை கொண்டுள்ளது. தமிழர் வாழ்வு, பன்முகம் கொண்ட ஆளுமையாக இலங்குவதை விளக்குகிறது. கட்டடக்கலை, மருத்துவம், ஆட்சித்திறன் மேலாண்மை பற்றியும், போர்த்தொழில், நெசவு நுட்பம், வேளாண் நுட்பம் பற்றியும் செய்திகளை அள்ளித் தரும் நுால்.– ஒளி


புதிய வீடியோ