/ கதைகள் / படித்துப் பழகு – 2
படித்துப் பழகு – 2
மொழித்திறனை மேம்படுத்த தமிழ், ஆங்கிலத்தில் அமைந்த சிறிய கதைகளின் தொகுப்பு நுால். சின்ன ஈயின் பசி, நல்ல தண்ணிக் கிணறு, சின்னத்தட்டு பெரிய தோசை, நான்கு பூக்கள், ரெண்டு கண்ணு நல்ல கண்ணு, இரு பாட்டு நிப்பாட்டு, மிட்டாய் தாத்தா, விண்வெளி என் வீடு, நிற்காத விக்கல், விடுகதைப் பாட்டு, போட்டித் தயார், பட்டம் பறக்குது, எங்கள் பள்ளிக்கூடம் ஆகிய தலைப்புகளில் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அதே பக்கத்தில் தரப்பட்டுள்ளன. இவை, மொழியை புரிந்து அறிய ஏதுவாக அமைந்து உள்ளன. வாசிப்பு திறனையும், மொழி புலமையையும் வளர்க்கும் வகையில் உள்ளன. கற்பனையை பெருக்குவதுடனும், மொழி புலமையையும் வளர்க்க உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ஒளி




