/ கட்டுரைகள் / படித்துறையில் பாசி படரலாமா?
படித்துறையில் பாசி படரலாமா?
எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நானா, நீயா என்ற போட்டியை சுவைபட விவரிக்கிறது. மரத்தில் மாம்பழம் தொங்கக் காரணம் அதன் காம்பு. எனவே, யார் பெரியவர் என்ற போட்டியில் காம்பை கிளை தாங்குவதையும், கிளையை மரம் தாங்குவதையும் விவரிக்கிறது. இதைக் கேட்ட வேர் நகைத்துக் கொள்கிறது. வேர் இல்லாவிட்டால் ஏது விளைச்சல். பொறாமை, கோபம், அச்சம், கூச்சம், சந்தேகம் எல்லாம், தனி மனிதனையும் சமூகத்தையும் பாழ்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று, ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.– சீத்தலைச்சாத்தன்