/ புத்தக மதிப்புரை / பகவத் கீதை: ஒரு விளக்கம்

₹ 100

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கூறும் நுால். பகவத் கீதை சாரத்தை விளக்குகிறது. நடு விரல், மோதிர விரல், சிறு விரல் சேர்ந்து சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களை குறிக்கிறது; ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவை குறிப்பிடுகிறது; ஜீவாத்மா, முக்குணங்களில் விடுபட்டால், பரமாத்மாவோடு ஐக்கியம் அடைவதுதான் ஞானமுத்திரையின் பொருள் என்கிறது. கிருஷ்ணர், அர்ஜுனனுக்குத் தேரோட்டியான தத்துவம் தரப்பட்டுள்ளது. பொறி- புலன்கள் வழியாக அனுபவிக்கும் சுக, துக்கங்களை கடப்பது பற்றி கூறுகிறது. கடமையை செய்யும் போது மரணமே ஏற்பட்டாலும் பேரின்பம் ஏற்படும் என கூறும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


புதிய வீடியோ