/ கட்டுரைகள் / பக்கம் ஒரு படிப்பினை

₹ 150

சுதந்திர போராட்ட தியாகிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் குறித்த தகவல்கள் உடைய சுவாரசிய தொகுப்பு நுால். பொதுவுடைமை தலைவர் ஜீவாவை, ‘இந்தியாவின் சொத்து’ என, காந்திஜி கூறியதை நினைவூட்டுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய சொத்தை ஏற்க மறுத்த கலைவாணர், ‘உழைத்து வாழ வேண்டும்’ என, கூறிய பாங்கை எடுத்துரைக்கிறது. புதிய நகரமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வெளிநாடு செல்ல திட்டமிட்ட அதிகாரிகளிடம், அப்போதைய முதல்வர் காமராஜர் கூறிய பதில், ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடமாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் விவசாயிடம் கற்றுக் கொண்டதை பகிர்கிறது. விவேகானந்தரை மணக்க விரும்பிய பணக்கார பெண்ணுக்கு கூறிய பதில் வியக்க வைக்கிறது. – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை