/ இலக்கியம் / பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்

₹ 95

32-பி, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை-17. (பக்கம்: 192) தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்புகளிலான கட்டுரைகளும், பண்டைத் தமிழ் நாகரிகம் பற்றி, 14 தலைப்புகளிலான கட்டுரைகளும், கலைகள் வரிசையை விவரிக்கும், 23 கட்டுரைகளும், தமிழர் அறிவியலை போற்றும், 24 கட்டுரைகளும், பண்டைத் தமிழ் பண்பாடு பற்றி ஏழு தலைப்புகளிலான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல், ஆசிரியர் வருகைக்கு முற்பட்ட தமிழ் நாகரிகத்தையே கூறுவதாயினும், முதல் இரு கழக நூல்களும் அழிந்துபோன காரணத்தால், இலக்கியச் சான்றுகள் எல்லாம் பிற்கால நூல்களிலிருந்தே எடுத்துரைக்கப்படுகின்றன என்று, மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரே கூறிவிடுகிறார். நுண்ணிய ஆய்வுடன் எழுதப்பெற்றுள்ள இந்த நூலை வாசிக்கையில், சங்க இலக்கியங்கள் ஊடே நாமும் பாவாணருடன் ஒரு மனப்பயணம் நிகழ்த்திய உணர்வு தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை