/ பயண கட்டுரை / பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள்
பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள்
சுவையான பயண அனுபவங்களை உள்ளடக்கிய நுால். கனடா நாட்டை சுற்றி வந்ததை எளிய நடையில் பதிவு செய்துள்ளது. உரிய இடங்களில் பொருத்தமான படங்களும் தரப்பட்டுள்ளன.கனவில் கண்ட கனடா என துவங்குகிறது. அந்த நாட்டில் வாழும் தமிழர்களின் நிலை பற்றியும் விவரிக்கிறது. சிறிய, 32 தலைப்புகளில் பயண அனுபவம் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டில் ஆரோக்கியமான அரசியல் நிலவுவதையும் தருகிறது.கனடாவையும், அங்கு வசிக்கும் தமிழர்களையும் கண்முன் நிறுத்தும் நுால்.– ராம்