/ கதைகள் / பஞ்சதந்திரக் கதைகள்

₹ 110

சிறுவர் நீதி கதைகளின் தொகுப்பு நுால். இதில் 41 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை விலங்கு, பறவைகளின் பின்னணியில் சொல்லப் பட்டுள்ளன. சிறுவர் விரும்பும் படங்களும் அலங்கரிக்கின்றன. கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழியை, சாவுக்கு தானே காரணமான நரியின் கதை சொல்கிறது. இது மாதிரி நீதி, சிறுவர் எதிர்காலத்துக்கு நல்லது. பகைவனும் சமயத்தில் உதவி செய்வான் என கூறப்பட்டுள்ளது. யாருக்கு வேண்டும் என்பதை புரிந்து அறிவுரை சொன்னால் தான் நல்லது என்பதை, ‘வேண்டாம் அறிவுரை’ கதை தெளிவுபடுத்துகிறது. ஒருவரது பிறவி சுபாவம் எப்போதும் மாறாது; பேராசையால் புலியின் மீது நம்பிக்கை வைத்து மோசம் போனது போன்ற பாடம் சொல்லும் கதை நுால். – சீத்தலைச்சாத்தன்