/ சமையல் / பாரம்பரிய உணவு ரகசியம்
பாரம்பரிய உணவு ரகசியம்
பாரம்பரிய உணவு வகை தயாரிப்பு குறித்த தகவல்கள் நிறைந்த நுால். கம்பங்கூழ், கேப்பை களி, தினை மாவு, வெல்லப் பணியாரம், பிரண்டை வறுவல், உளுந்து கஞ்சி, கொள்ளு சோறு, எள்ளு சாதம் உட்பட, 61 வகை உணவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மரபணு மாற்று, பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பேராபத்துகள் பற்றிய விபரங்களை குறிப்பிடுகிறது. நச்சு உணவுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய விதை, அதிக மகசூல் பெற முடியும் என்பதை நிரூபித்தது தரப்பட்டுள்ளது. இயற்கை விவசாயி நம்மாழ்வார் பற்றிய குறிப்பும் உள்ளது. உணவு பற்றிய பழமொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாரம்பரிய உணவுகளால் ஆரோக்கியமாக வாழ வழி கூறும் நுால். –- புலவர் சு.மதியழகன்




