பரணிக்கரை திருத்தலங்கள்
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். மூர்த்தி, தலம், தீர்த்தம் இவை மூன்றும் இணைந்த திருத்தலங்களை வழிபடுவது, உண்மையிலேயே மிகப்பெரிய கொடுப்பினை. இந்த அதிர்ஷ்டத்தை பெற்றவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் வாழும் பக்தர்கள். தாமிரபரணி நதி உற்பத்தி ஸ்தானம் துவங்கி, கடலில் கலக்கும் இடம் வரை, கரையில் கோவில்கள் நிறைந்துள்ளன. திருநெல்வேலியில் திரும்பி பார்க்கும் இடமெல்லாம் கோவில் தான். மூர்த்தி, தலம், தீர்த்தத்தை முறைப்படி தரிசித்தால் குரு அருள் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த கோவில்கள் குறித்து ஏராளமான வரலாற்று தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பழமையான புத்தங்களை படித்து, அவற்றில் உண்மையாக அமைந்த தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. கோவில்களில் நேரடியாக சென்று செய்திகளை திரட்டியும் தரப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ஆன்மிக பயணம் செய்ய விரும்புவோர், இந்த புத்தகத்தை படித்துவிட்டு புறப்படலாம். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி வளமான தண்ணீரை வழங்கி கொண்டிருப்பது போல, கருத்துகளை வாரி வழங்கிஇருக்கிறது இந்த நுால். – சிவா




