/ ஆன்மிகம் / பரசுராமாயணம்
பரசுராமாயணம்
தசாவதாரங்களில் பரசுராமன் பற்றி விவரிக்கும் நுால். திருவனந்தபுரம் அருகே திருவலத்தில் கோவில் உள்ளதை அறிய தருகிறது. திருமாலின் அவதாரங்களில் இது ஆவேசமாக உள்ளதை குறிப்பிடுகிறது. பரசுவின் தாத்பரியங்களை விளக்கமாக சொல்கிறது. பரசுராமாயணமும் ராம பக்தர்களுக்கு அவசியமானது என்கிறது. கற்பு என்பதற்கு பழங்காலத்தில் உள்ள வித்தியாசமான இலக்கணம் விவரிக்கப்பட்டு உள்ளது. ஒன்பது சிரஞ்சீவிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கேரளா தோன்ற காரணம் பரசுராமன் தான் என தகவல்களை தருகிறது. நளனை, தமயந்தி கண்டுபிடித்ததையும் சுவைபட தரும் நுால். – சீத்தலைச்சாத்தன்




