/ கட்டுரைகள் / பசுமை நிறைந்த நினைவுகளே...

₹ 450

பிரிக்க முடியாதது வாரமலரும் வாசகர்களும் என்பதற்கேற்ப, 25 ஆண்டுகளாக வாசகர்களை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் பணியை செய்து வருகிறது, ‘தினமலர்’ வாரமலர். மூலிகைகளுடன் நம்மை தொட்டு விளையாடும் குற்றாலம் அருவிக்கு மட்டும் கூடுதல் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது போல. மழையின் சாரலுடன் அருவியின் சாரலும் இணைந்து ஏற்படுத்தும் அனுபவம், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவசம்.அந்த குற்றாலத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லும், ‘தினமலர்’ குழுவுடன் இணைந்து பயணித்து வரும் முருக ராஜ் கைவண்ணத்தில், வாரந்தோறும் வெளிவந்த எழுத்து, புத்தகமாக உருமாறியுள்ளது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் வந்த வாசகர்கள் துவங்கி, அவர்களோடு உள்ள பிணைப்பையும் விளக்கியுள்ளார் முருகராஜ். படிக்கும் வாசகர்கள், தங்களையும் புத்தகத்தோடு சேர்த்து பயணிப்பர் என்பது உண்மை.– எம்.எம்.ஜெ.,


சமீபத்திய செய்தி