/ இலக்கியம் / பதினெண்கீழ்க்கணக்கு நுால்கள் (தொகுதி – 1)
பதினெண்கீழ்க்கணக்கு நுால்கள் (தொகுதி – 1)
பழந்தமிழர் இலக்கியங்களில் பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் ஆறு நுால்களுக்கு விளக்கம் தரும் நுால். நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பதுக்கு விளக்கங்களை தருகிறது. குறிப்புகள் நுால்களின் தன்மையை புரிய உதவுகின்றன. நாலடியார் பாடல்களின் வரலாற்று சூழலை குறிப்பிட்டு பொருள், விளக்கம் தரப்பட்டுள்ளது. நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பதுக்கு ஆசிரியர் குறிப்பு, பொருள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. பழந்தமிழர் அகம், புறவாழ்வியல் கூறுகளை அறிய தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




