/ கட்டுரைகள் / பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவை விழிப்புணர்வு

₹ 75

உதயப்ரியா பதிப்பகம், 8/1, 10வது சந்து, 17வது குறுக்குத் தெரு, இந்திரா நகர், சென்னை- 20. (பக்கம்: 184) நூலாசிரியர் காவல்துறை கண்காணிப்பாளர். எழுத்தாற்றல், பேச்சாற்றல் கொண்டவர். தன் பணி அனுபவம் சார்ந்த விஷயங்களை கட்டுரையாக்கி பொதுமக்களை விழிப்புறச் செய்யும் ஆசிரியரின் பணி பாராட்டத்தக்கது.இருசக்கர வாகனத்தில் முதலில் பயணிப்பவர்கள் தான் பாதிக்கப்படுவர். பஸ்சின் படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள், அந்த பஸ்சின் பொறுப்பில் இரு பொறுப்பாளர்களை அவமதிக்கின்றனர். சிற்றுண்டிச் சாலையில் பணிபுரிபவர்கள் பொறுமையும், நகைச்சுவை உணர்வுடன் இருந்தால் எவ்வளவு நன்மை. இப்படி ஏராளமான கருத்துகளை பக்கத்திற்கு பக்கம் முன் வைக்கிறார். காவல்துறை சிறப்பாக பணியாற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு தந்தால் நல்லது என்று கூறும் ஆசிரியரின் கருத்துகள் சிறப்பானவை, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியும் ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை