/ இலக்கியம் / பழந்தமிழ் இலக்கியத்தில் மருந்து

₹ 300

கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தொல்காப்பியம், பழந்தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் காணப்படும் கருத்துக்களை உள்ளடக்கியது. இயற்கை மருத்துவம், அறுவை மருத்துவம், ஆன்மிக மருத்துவம், உணவு மருத்துவம் போன்றவற்றை இலக்கியத்தின் வாயிலாக உணர்த்துகிறது. காலரா என்ற கொள்ளை நோய் பரவியது பற்றிய தகவல் சுவையானது. திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள மருத்துவம் பற்றிய செய்திகளை சுருக்கமாகத் தருகிறது. நோய், மருந்து பற்றிய இலக்கியக் கருத்துக்கள், பழந்தமிழ் மருத்துவப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. உடல் நலம் பேண, ‘உணவே மருந்து’ என்ற கருத்தாக்கமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘வருமுன் காத்தல்’ என்ற கருத்தை வலியுறுத்தும் கருத்தும் உள்ளது. தமிழரின் மருந்தியல் அறிவையும் உணர்த்துகிறது. வழிகாட்டியாக விளங்கும் நுால்.– ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை