/ பெண்கள் / பெண் எனும் பகடைக்காய்

₹ 200

பெண்கள் பகடைக்காயாக எப்படி சமூகத்தில் உருள்கின்றனர் என்பதை கூறும் நுால். சமுதாயத்தில் ஒவ்வொரு நிகழ்விற்கும் பெண் பார்வை உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறது. பெண் வழியே விரியும் பார்வை எத்தனை அவசியமானது என எடுத்துரைக்கிறது. ஜனநாயக அமைப்பில் பெண் குரல் ஒலிக்க வேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்துகிறது. சமூக நிகழ்வுகளை முன் நிறுத்தி பெண் பார்வையை அலசுகிறது. நிகழ்ந்த காலகட்டத்திற்கு இழுத்து செல்கிறது. இப்போது வரை சமூகம் பெண்ணை புறக்கணித்துள்ளதை ஓங்கிச் சொல்கிறது. பெண்கள் பற்றிய பார்வை விரிவடையாமல் குறுகி இருப்பதை உணர்த்தும் 30 கட்டுரைகள் உள்ளன. பெண்களின் தீராத பிரச்னைகள் குறித்து சங்கிலி தொடராக அமைந்த தனித்துவமான கட்டுரைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ