/ சுய முன்னேற்றம் / ஆளுமையும், வெற்றியும்

₹ 40

திட்டமிட்டு முன்னேறுவதற்கு வழிகாட்டும் நுால். மொத்தம் 10 தலைப்புகளில் நம்பிக்கை ஊட்டும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. எப்படி, எதில் முன்னேறுவது என எண்ணுவோருக்கு உதவும் வகையில் உள்ளது. உன்னை நம்பு, சவால்களை சமாளி, செயல் துவங்க உறுதி கொள், மன உறுதியுடன் மகிழ்ச்சி பெறு, செயல்திட்டம் உருவாக்கு, இலக்கை உற்று நோக்கு உள்ளிட்ட தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பாதையை தெளிவாக்கி தக்க பயிற்சி எடுத்தால், எந்த துறையிலும் முன்னேற முடியும் என நம்பிக்கையூட்டுகிறது. வெற்றியோ, தோல்வியோ முக்கியமல்ல; அதற்காக எடுக்கும் முயற்சி தான் முக்கியமானது என எடுத்து கூறுகிறது. எளிய நடையில் கருத்துகள் சுருக்கமாக உரைக்கப்பட்டுள்ளன. முன்னேற முயற்சிப்போருக்கு உதவும் நுால். – ஒளி


முக்கிய வீடியோ