பெருங்கதைக் காப்பியத்தில் பெண்கள்
66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78. போன்: 6538 3000, 97890 72478 (பக்கம்: 224) மிகுதியாகப் பேசப்படாத ஒரு காப்பியம் பெருங்கதை; பிருகத்கதா எனும் வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. பெருங்கதைக் காலத்து வாழ்ந்த மகளிர் இயல்புகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள், பண்பாடு, நாகரிகம் ஆகியவை நூலில் விளக்கப்பட்டுள்ளன. அக்காலப் பெண் சமூகம் இன்பம் துய்க்கும் கருவியாகப் பயன்பட்டமை பற்றியும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.பெண் பாத்திரங்களின் அறிவுத் திறன்களை எடுத்துரைத்தல், நூலாசிரியரின் அகன்று விரிந்த ஆய்வுப் பார்வைக்கு சான்றாகும். ஆய்வுப்பட்டத்திற்காக எழுதப்பெற்ற நூலாயினும், அனைவரும் படித்து இன்புறத்தக்க வகையில் இருப்பது பாராட்டிற்குரியது.""திருமால் மார்பில் வீற்றிருந்து இன்பமடைகின்ற திருமகள் போல, முருகனைப் போன்ற உதயணன் மார்பில் தங்கி இன்பமடைவதற்கு வாசதத்தை முற்பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும்.ஆசிரியரின் மொழிநடைக்கு சான்று இது. காப்பிய ஆர்வம் உடையவரன்றி எவரும் படித்து மகிழத்தக்க நூல்.