/ கவிதைகள் / பேசும் மரங்கள் பேசாத மனிதர்கள்

₹ 225

சொந்தப்பாக்களின் தொகுப்பு நுால். விநாயகர் துதியில் துவங்குகிறது. உயிர் வதையை தடுக்கும் விதமாக, ‘அதுவும் மா... மா... அம்மா என்று தானே கத்துகிறது. அது தாயை ஞாபகப் படுத்துகிறதே... கருணை இல்லையோ’ என்கிறது. அடுத்து, ‘அறமே’ என்ற தலைப்பில், ‘பொய் சொல்பவனுக்கு பயம் நிழலாய் கூட வரும்... உண்மை சொல்பவனுக்கு தைரியம் நிழலாக கூட வரும்...’ என்று உரைக்கிறது. தொடர்ந்து, ‘மூத்தோரைப் போற்று’ தலைப்பில், ‘கிழவன் என்று ஏளனம் செய்ய வேண்டாம்... அறிவுக்கடல் என ஆசீர்வாதம் வாங்கிச் செல்லுங்கள்...’ என புதிய சிந்தனையை மலரவிட்டுள்ளது. உணர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை தொகுப்பு நுால். – பின்னலுார் விவேகன்


புதிய வீடியோ