/ புத்தக மதிப்புரை / பிரியா பிரியா ஓ பிரியா

₹ 140

ஐதீகமான குடும்பத்து நிகழ்வுகளை, நகைச்சுவையுடன் படம்பிடிக்கும் நாடக நுால். தலைபோகிற பிரச்னையாக இருந்தாலும், நையாண்டியாக எதிர்கொள்ளும் சங்கர் என்ற கதாபாத்திரம், வாழ்வில் மேம்படும்போது, அடித்தளத்தில் இருக்கும் உறவினரை கைதுாக்கி விடும் நோக்கத்தை மையமாக கொண்டுள்ளது. அவலங்களை நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறது. பிரிந்த நலிவுற்ற சொந்தத்தை ஒருங்கிணைக்க எண்ணும் பிரியா முதன்மை கதாபாத்திரம். வங்கி மேலாளராக இருந்து உறவுகளை ஒட்ட வைத்ததில் வெற்றி பெற்றாரா என்பதற்கு விடை காண்கிறது. துணை கதாபாத்திரங்கள், நக்கல், கிண்டல் செய்து கதையின் போக்கை துாக்கி நிறுத்த துணை செய்கின்றன. குடும்ப பிரச்னைகளுக்கு தாங்களே தீர்வு காண வலியுறுத்தும் நாடகம். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி