/ புத்தக மதிப்புரை / பூமிக்கு யாரும் பாரமில்லை
பூமிக்கு யாரும் பாரமில்லை
சமுதாயத்தை பிரதிபலிக்கும் கருத்தை முன்வைக்கும் நாடக நுால். உரையாடல் தனித்த அழகை கொண்டுள்ளது. தகுதிக்கு மீறி கடன் வாங்கி பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்புகிறார் தந்தை. அயல்நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து, கடமை மறந்து போகிறான் மகன் என சமூக அவலத்தை அப்பட்டமாய் சாடியிருக்கிறது. நடுத்தர மக்களின் யதார்த்த வாழ்க்கையை கதாபாத்திரங்கள் வழியாக கண்முன் நிறுத்துகிறது. கேள்வி எழுப்பும் வசனங்கள் மனதோடு ரீங்காரமிடுகின்றன. கதைக்களம், கருப்பொருள், நாடக வடிவம், வட்டார வழக்கு சொற்கள், பாத்திரப்படைப்புகள் யாவும் அருமையாக உள்ளன. நாடகம் வழியாக நுாலக நண்பர்கள் திட்டத்தையும், நுால் வாசிப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கும் புத்தகம். – ஊஞ்சல் பிரபு




