/ கட்டுரைகள் / பூவைத் தேடி வந்த தென்றல்
பூவைத் தேடி வந்த தென்றல்
காதல் பற்றிய சுவாரசியமான நுால். பல ஜோடிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் காட்டப்படும் காதலுக்கு வில்லன் இல்லை; விட்டு கொடுக்கும் குணம் உள்ளது. அதே சமயம் வியாபாரத்தில் வில்லத்தனமும், வெட்டுக்குத்தும் உள்ளதாக காட்டப்பட்டு உள்ளது. எதற்கெடுத்தாலும் மனதை பாரமாக வைத்துக் கொள்ளாமல் நீர்வீழ்ச்சி நதியாக மாறுவது போல தெளிவும், அமைதியும் வேண்டும் என்கிறது. வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும் தத்துவ முத்துகள் உதிர்க்கப்பட்டுள்ளன. வங்கத்துக்கு சென்ற பாரதியார், மனைவியை உடன் அழைத்து செல்லாதது ஏன் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அங்கு பெற்ற அறிவுரையால் பின்னர் மனைவியுடன் பயணித்ததை விவரிக்கிறது. விதவை மறுமண சிறப்பையும் எடுத்துரைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்




