/ கவிதைகள் / பூவென விரிந்த மீனின் முள்

₹ 160

எளிய மக்கள் வாழ்க்கை, ஆதிக்க மனநிலை கொண்டோர் முகங்களை காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் காதை குடைந்து செல்லும் காற்றின் செயல் குறித்த படைப்பு ரசிக்க வைக்கிறது. குடும்ப புகைப்படத்தை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி, கவலையுடன் உறவுகளை தேட வைக்கிறது. மனநலம் பாதித்தவர் நிலை பற்றிய கவிதை சிந்தனையை திறந்துவிடுகிறது. கனவின் நன்மை, தீமை பற்றிய கவிதை வாழ்ந்த நினைவுகளுடன் பொருந்துகிறது. சுவரில் காணும் அரசியல் தலைவர்கள் பெயரை பொருட்படுத்தாமல், அருகில் புல் மேயும் கால்நடைகளை மனக்கண்ணில் நிறுத்துவது நமக்கானதை எடுத்துக் கொள்ள சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு கவிதையும் சமூக பார்வை யுடன் படைக்கப்பட்டுள்ள நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை