/ கதைகள் / பொரி உருண்டை

₹ 60

சிறுவர்களின் சிந்தனையில் எழுந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். காட்டை அழிக்கும் மனிதர்கள் செயலால் வறட்சி ஏற்பட்டதை, காட்டு விலங்குகள் உரையாடல் வழியாக வெளிப்படுத்துகிறது ஒரு கதை. நாயுடன் சிறுவனுக்கு உள்ள பரிவை, ‘டீனும் நானும்’ கதை அக்கறையுடன் பகிர்கிறது. செடி வளர்க்கும் சிறுவன், உறவினர் வீட்டுக்கு செல்லும் போது பராமரிக்க முடியவில்லையே என்ற கவலை, ‘என் தோட்டம்’ கதையாக வெளிப்படுகிறது. அன்றாட செயல்களை டைரியில் குறிப்பெழுத, ‘பேனாவும் டைரியும்’ கதை எடுத்துரைக்கிறது. உணவை மருந்து போல் சாப்பிட்டால், மருத்துவமனை செல்வதை குறைக்கலாம் என்கிறது ஒரு கதை. பிளாஸ்டிக் தீமையும் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. சமூக உணர்வுடன் படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ