/ கதைகள் / போரில் பிறந்த சபதம்!

₹ 300

அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வுகளை புதிய கோணத்தில் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, அனுமனைப் பணிவோருக்கு என்றும் வெற்றியே! இதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது போன்ற கருத்துகளை கூறுகிறது.இந்த புத்தகம் புகட்டும் அறிவுரைகள்: * நமக்கு மீறிய சக்தியே, நம் செயல்களை தீர்மானிக்கிறது * சந்தர்ப்பமும், சூழ்நிலையும் மட்டுமே குற்றம் சாற்றப்பட வேண்டியவை* சனியைப் போல் கெடுப்பாரும்இல்லை, கொடுப்பாரும் இல்லை!* உலகில் பாசத்திற்கும், நேசத்திற்கும், பதவிக்கும், பொருளுக்கும் அடிமையாகிவிட்டால் பந்தம் என்றும் பிரியாது* மூதாதையருக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்திற்கு முக்கியத்துவம் * சொல் ஒன்று, பொருள் இரண்டு என்ற குழப்பத்தால் வாழ்வில் வந்து சேரும் தவறுகள்* உண்மையான பக்தி இருக்குமே யானால் இறைவன் துணை நிற்பான் தானே!* புராணங்களிலும், பழங்கதைகளிலும், ஈசன், விஷ்ணுவை வணங்கி வேண்டுவதைப் பெறுவதும், விஷ்ணு ஈசனை சில சமயம் வணங்கி வேண்டிப் பெறும் நிகழ்ச்சிகளும் நிறையவே உண்டு! இதை உணர்ந்தால் ஈசனும், விஷ்ணுவும் ஒன்றே என உணரலாம்* தவ நெறியாலும், தார்மீக குணத்தாலும் மனிதன் தெய்வமாகலாம்* போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு சொல்லியது பகவத் கீதை* இறைவன் என்றுமே சாட்சி நாயகனாக இருப்பதை உணர்கிறோமல்லவா. அன்பும், பக்தியும், சரணாகதியும் தானே அவனை அழைத்து வரும்; துன்பங்களிலிருந்து காக்கும்* கைகேயி கொடியவளா, தாய்மையற்றவளா, சுயநலக்காரியா, பழிக்கப்பட வேண்டிய பிறவியா என்பது போன்ற பலதரப்பட்ட தகவல்களை அள்ளி வழங்குகிறது. இந்த சிறுகதை தொகுப்பு பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.– இளங்கோவன்


சமீபத்திய செய்தி